பொது செய்தி

தமிழ்நாடு

'தோல்வி அனுபவத்தில் வெற்றிக்கு தயாராகுங்கள்'

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்போரூர் : ''தோல்வி அனுபவத்தை வைத்து, வெற்றிக்குத் தயாராக வேண்டும்,'' என, பள்ளி விளையாட்டு விழாவில், செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி., கண்ணன், மாணவர்களிடம் பேசினார்.

திருப்போரூர் அடுத்த, சோணலுார் கிராமத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அலுவலர்கள் சங்கத்தின் சர்வதேச பள்ளி உள்ளது. இப்பள்ளியின், மூன்றாம் ஆண்டு விளையாட்டு விழா, நேற்று நடந்தது.இதில், தாளாளர் முரளிதரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, செங்கல்பட்டு எஸ்.பி., கண்ணன் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.

தொடர்ந்து, எஸ்.பி., கண்ணன் பேசியதாவது:பொதுவாக, விளையாட்டுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், இப்பள்ளியில் அப்படியில்லை. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இவ்விழாவில் இருக்கிறீர்கள்.உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது, ஒவ்வொரு மாணவரிடம், ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து, அதில், அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளி பருவம் முதலே, நீங்கள் என்னவாக வேண்டும் என, தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியடைந்த மாணவர்கள், அதை தோல்வியாக எண்ணாமல், ஓர் அனுபவமாக வைத்து, வெற்றிக்கு தயாராக வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், தற்காப்புக் கலை உட்பட, பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X