சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : பிப் 14, 2020
Advertisement

கார் விபத்தில் புது மாப்பிள்ளை பலி

பெரம்பலுார்: தஞ்சாவூர், அம்மாபேட்டை புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர், கண்ணதாசன், 32. இவருக்கும், சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா, 28, என்பவருக்கும், 7ம் தேதி, அம்மாபேட்டையில் திருமணம் நடந்தது. 12ம் தேதி சென்னையில் வரவேற்பு நடந்தது.இதில், பங்கேற்ற தம்பதி, கண்ணதாசனின் உறவினரான, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியின் காரில் நேற்று முன்தினம் இரவு, ஊருக்கு கிளம்பினர். கார், நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு, அரியலுார், தவுத்தாய்க்குளம் கிராமம் அருகே மருதையாற்று பாலத்தில் வந்தபோது, டிரைவர் கண் அயர்ந்ததால், நிலை தடுமாறி, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், கண்ணதாசன் உயிரிழந்தார். பூர்ணிமா, வினோத் சிகிச்சை பெறுகின்றனர்.

எரிந்த நிலையில் ஆண் சடலம்

கோவை: கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே, பாலவிநாயகா நகர் பிரிவில், எல்லை பள்ளத்தில், பாதி எரிந்த நிலையில், ஆண் சடலம் நேற்று காலை கிடந்தது. சடலத்துக்கு அருகே, பைக் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.அதன் பதிவு எண் மூலம் விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தவர், கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன், 34; கார் டிரைவர் என்பது தெரிந்தது. போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திஹார் சிறை காவலர் சொந்த ஊரில் தற்கொலை

பெரம்பலுார்: பெரம்பலுார், அய்யர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ், 27. தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 8வது பட்டாலியன் பிரிவில் போலீசாக பணிபுரிகிறார். தற்போது, டில்லி திஹார் சிறையில், பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார்.கடந்த, 10 நாட்களுக்கு முன், விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த ரமேசுக்கு, திருமண ஏற்பாடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரமேஷ் நேற்று காலை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அரும்பாவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஷேர் ஆட்டோ மீதுகார் மோதி இருவர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம், வெண்ணத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர், ஷேர் ஆட்டோ டிரைவர் ஆறுமுகம், 52. நேற்று பகல், 2:30 மணிக்கு, ஆட்டோவில், அதே கிராமத்தைச் சேர்ந்த, 10 பேரை ஏற்றி, வெண்ணத்துார் நோக்கி வந்துள்ளார்.மின்வாரிய அலுவலகம் அருகே, எதிரே வந்த கார், ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த துரைராஜ், 70, தனுஷ்கோடியம்மாள், 50, இறந்தனர். மற்றவர்கள் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X