செம்மரம் கடத்தல் : 11 பேர் கைது

Added : பிப் 14, 2020
Advertisement
 செம்மரம் கடத்தல் : 11 பேர் கைது

திருப்பதி: திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட, 11 பேரை, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆந்திரா மாநில, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:திருப்பதி அருகே, ஸ்ரீவாரிமெட்டு வனப் பகுதியில், நேற்று காலை, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சீனிவாசமங்காபுரம் கோவில் அருகில், ஒரு டெம்போ டிராவலர் மற்றும் மகிந்திரா வேன் நின்று கொண்டிருந்தது.அதில், 60 பேர் கும்பல் செம்மரக் கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது. இதை கண்ட போலீசார், அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர்.

போலீசாரை கண்டவுடன், அவர்கள் கற்களை வீசி தாக்கியபடி, வனத்திற்குள் தப்பியோடினர்.விரட்டிச் சென்ற போலீசார், 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 52 செம்மரக் கட்டைகள், அதை கடத்த பயன்படுத்திய டெம்போ டிராவலர், மகிந்திரா வேன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள், திருவண்ணாமலை மற்றும் வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த, 11 பேர் மற்றும் உள்ளூர்வாசிகள் இருவர் என்பது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X