சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் இன்ஜினியர், உதவியாளர் கைது

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (12)
Advertisement
 பெண் இன்ஜினியர், உதவியாளர் கைது

தர்மபுரி: தர்மபுரி அருகே, விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க, லஞ்சம் வாங்கிய பெண் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளியைச் சேர்ந்தவர், விவசாயி மாது, 45. இவர், 2 ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்து வருகிறார். அரசு இலவசமாக வழங்கும், பூந்தோட்ட மின் இணைப்பு பெறுவதற்கு, இண்டூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.உதவி செயற்பொறியாளராக பணிபுரியும், தர்மபுரி, வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த அகல்யா, 40, வணிக உதவியாளர் முனுசாமி, 51, ஆகியோர், முறையே, 8,000 மற்றும், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.லஞ்சம் கொடுக்க விரும்பாத மாது, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

நேற்று, இண்டூர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற மாது, உதவி பொறியாளர் அகல்யாவிடம், முதல் தவணையாக, 5,000 ரூபாய் வழங்கி, வணிக உதவியாளர் முனுசாமியிடம், 2,000 ரூபாய் கொடுத்தார்.அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
18-பிப்-202018:20:10 IST Report Abuse
Indhuindian ஒரு அறுபது வருடங்களுக்கு முன்னாள், இந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் VIP வருகை மற்றும் வெளியூர் பயணங்கள் ஒரு காலத்தில் பிரசரிக்கப்பட்டு வந்தது அது போல இப்போது தினமலரில் வூஷலில் மாடியர்வர்கள் பட்டியலை போட்டு விட்டால் கொஞ்சம் சௌகர்யமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18-பிப்-202012:26:26 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று நிரூபித்த அந்த பெண் பொறியாளருக்கு இந்த ஆண்டின் ஊழல்வாதி என்ற பட்டம் தரலாம்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
16-பிப்-202017:49:54 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி "இன்ஜினீயர்" இந்த ஆங்கில வார்த்தைக்கு சங்கம் வளர்த்த டாஸ்மாக் நாட்டில் தமிழ் இல்லையா?????? 50 வருடங்கள் உலக தொடர்பு அற்று இருந்த மியான்மார் நாட்டு தமிழ் மக்கள் கூட அழகிய தமிழ் ..பேசி எழுதுகின்றார்கள் ..
Rate this:
Share this comment
Raj, Leeds, United Kingdom - Leeds,யுனைடெட் கிங்டம்
18-பிப்-202003:43:19 IST Report Abuse
Raj, Leeds, United Kingdomயார் சொன்னார்கள் இல்லையென்று? மின் பொறியாளர்....
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
18-பிப்-202017:01:29 IST Report Abuse
s.rajagopalanரொம்ப முக்கியம் .... மானம் போய்க்கொண்டிருக்கிறது ...இவுரு ...தமிழ் மொழி பற்றி பேசுறாரு ..... நல்ல தமிழ் பேசினால் நல்லா கொள்ளையடிக்கலாம்ங்களா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X