சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் கார் விபத்து: 4 பேர் பலி

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 கும்மிடிப்பூண்டியில் கார் விபத்து: 4 பேர் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்ட டேங்கர் லாரியின் பின்னால், கார் மோதிய விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர்; இருவர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் அருகே, லாயர்பேட்டாவைச் சேர்ந்தவர், ஜஷ்வந்த், 33. நேற்று அதிகாலை, அமெரிக்கா புறப்பட்டு சென்ற, அவரது பெற்றோரை, சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி, காரில் வீடு திரும்பினார்.காரை, ஜஷ்வந்த் ஓட்டி செல்ல, அவரது மனைவி அனுசெல்வி, 27, அவர்களது, 1 வயது ஆண் குழந்தை, ஜஷ்வந்தின், 37 வயது சகோதரி, அவரது, 14 - 12 வயது மகள்கள் என, ஆறு பேர் அந்த காரில் பயணித்தனர்.நேற்று காலை, 7:30 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பனங்காடு பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பால் டேங்கர் லாரி மீது கார் மோதியது. இதில், காரின் மேல் பகுதி முழுவதும் பெயர்ந்து உருக்குலைந்தது. விபத்தில், 1 வயது ஆண் குழந்தை, அனுசெல்வி, ஜஷ்வந்த் சகோதரி ஆகியோர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், 12 வயது சிறுமி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜஷ்வந்த், 14 வயது சிறுமி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம் தடா போலீசார், விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X