பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ - மாணவியருக்கு பட்டமளிப்பு விழா

Added : பிப் 14, 2020
Advertisement

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே இயங்கும், தனியார் பொறியியல் கல்லுாரியில், 6ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.

கல்லுாரி நிறுவனர் கே.மீர்முஸ்தபா உசேன் தலைமையில் நடந்த இவ்விழாவில், ராமநாதபுரம் எம்.பி., கே.நவாஸ்கனி பங்கேற்று, 83 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.தொடர்ந்து அவர், மாணவர்களின் எதிர்காலம், நாட்டுக்கும், வீட்டுக்கும் மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் வெற்றி பயணத்திற்கான வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 பயிலும், 100 மாணவ - மாணவியருக்கு, கல்லுாரி நிர்வாகம் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், படித்து வேலையில்லாத, 50க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான நியமன ஆணையும் அளிக்கப்பட்டது.கல்லுாரி நிர்வாக அலுவலர்கள், துறைதலைவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X