சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக பேச்சு டாக்டர் மீது பாய்ந்தது என்.எஸ்.ஏ.,

Added : பிப் 14, 2020
Advertisement

லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசியதால், டாக்டர் கபீல் கான் மீது, என்.எஸ்.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் டிசம்பர், 12ல் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர் கபீல் கான், அச்சட்டத்திற்கு எதிராகப் பேசினார்.

இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். முதலில், அலிகர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்காக, மதுரா சிறைக்கு மாற்றப்பட்டார்.இதையடுத்து, ஜாமீன் கோரி, அலிகர் மாவட்ட நீதிமன்றத்தில், கபீல் கான் முறையிட்டார். அந்த மனுவை, 10ம் தேதி விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டார். ஆனாலும் அவர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்இந்நிலையில், கபீல் கான் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இது குறித்து பேசிய மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் குல்ஹாரி, ''கபீல் கான் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ''இதனால், அவர் சிறையில் இருந்து இப்போதைக்கு விடுவிக்கப்படமாட்டார்,'' என்றார்.கடந்த, 2017ல், கோரக்பூர் மருத்துவமனையில், 60 குழந்தை கள் இறந்த விவகாரத்தில், டாக்டர் கபீல் கானுக்கும் பங்கிருப்பதாக சொல்லி கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X