பொது செய்தி

தமிழ்நாடு

துறைமுக அறிவிப்பு மீனவர்கள் மகிழ்ச்சி

Added : பிப் 14, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : 'இடைக்கழிநாடு - மரக்காணம் பகுதியில், 150 கோடி ரூபாய் மதிப்பில், மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்' என, தமிழக பட்ஜெட் அறிக்கையில் அறிவித்திருப்பதை, மீனவர்கள், மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கானத்துார் ஊராட்சி, ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு பேரூராட்சி, ஆலம்பரைகுப்பம் பகுதி வரை, 36 மீனவ பகுதிகள் உள்ளன.இஙகு வசிக்கும், 7,000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடிக்கின்றனர்.

இப்பகுதி மீனவர்களின் வசதிக்காகவும், நலனுக்காவும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலோர எல்லைப் பகுதியான, ஆலம்பரைகோட்டை - அழகன் குப்பங்கள் இடையே, வங்க கடல் - பக்கிங்ஹாம் கால்வாய் கழிமுக பகுதியில், துறைமுகம் அமைக்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய பட்ஜெட் அறிவிப்பில், 150 கோடி ரூபாய் மதிப்பில், இப்பகுதியில் துறைமுகம் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, மீனவர்கள் கூறுகையில், 'மீன்பிடி துறைமுகம் அமைக்க, பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதுபற்றி, பட்ஜெட்டில் அறிவித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X