சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து; ஆதம்பாக்கத்தில் தம்பதி கைது

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை ஆதம்பாக்கத்தில், கள்ளக்காதலனை, கத்தியால் சரமாரியாக குத்திய வடமாநில பெண், அவரது கணவன் ஆகியோரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வடமாநிலமான அசாமை சேர்ந்தவர் அபுசாலி முஸ்தபா உசேன், 22. இவரது மனைவி ரூஸ்தானா பேகம், 18. இருவரும், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர், 11வது தெருவில் வசித்து வருகின்றனர்.மிரட்டல்அதே மாநிலத்தைச் சேர்ந்தவர் தஜ்மல் அகமது, 22. இவர், ஆதம்பாக்கம், கக்கன் நகர், பிரதான சாலையில் வசித்து வருகிறார். நண்பர்களான இருவரும், வேளச்சேரியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ரூஸ்தானாவுக்கும், தஜ்மலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், உடல் நிலை பாதிப்பு காரணமாக, பணிக்கு அரைநாள் விடுப்பு எடுத்து, அபுசாலி வீடு திரும்பினார்.வீட்டில், தன் மனைவியுடன், தஜ்மல் அகமது நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ரூஸ்தானா, ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கள்ளத்தொடர்பு தெரியவந்ததால், மனைவியுடன் அவர் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது, தஜ்மல் அகமது தான், தன்னை மிரட்டி வலுக்கட்டாயமாக பழகியதாக ரூஸ்தானா தெரிவித்தார்.நேற்று காலை, தஜ்மல் அகமதுவை வீட்டிற்கு அழைத்து, அவருடன் அபுசாலி தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

சிகிச்சை:

கணவருக்கு ஆதரவாக, சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்த ரூஸ்தானா, தஜ்மல் அகமதுவின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்தியுள்ளார்.அபுசாலியும், அந்த கத்தியை பறித்து, தஜ்மலின் இடுப்புப் பகுதியில் குத்தி யுள்ளார். பலத்த காயமடைந்த தஜ்மல் அகமது, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அபுசாலி, ரூஸ்தானா ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X