எதில் பின்தங்கி உள்ளோம்?| Dinamalar

எதில் பின்தங்கி உள்ளோம்?

Added : பிப் 14, 2020
Share
எதில் பின்தங்கி உள்ளோம்?

சர்வதேச பட்டினிப் பட்டியலில், இந்தியா, 102வது இடம் வகிக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து, கொள்கைகளை வகுப்பவர்கள், பார்லி., உறுப்பினர்கள், விவசாய பல்கலைக் கழகங்கள், வேளாண் விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நாம் எதில் பின் தங்கி இருக்கிறோம். கொள்கை வகுப்பதிலா, அதை செயல்படுத்துவதிலா அல்லது முக்கியத்துவம் அளிப்பதிலா என்பதை ஆராய்ந்து, உடனடியாக தீர்வு காண வேண்டும்.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

பயன் அடைந்தவர்கள் யார்?

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற தற்கொலை தாக்குதலால், அதிகம் பயன் அடைந்தவர்கள் யார்? தாக்குதல் குறித்த விசாரணையின் முடிவு என்ன ஆனது? தாக்குதல் நடக்க காரணமாக இருந்த பாதுகாப்பு குறைபாடுக்கு, பா.ஜ., அரசில் யார் பொறுப்புஏற்க உள்ளனர்?

ராகுல், லோக்சபா எம்.பி., - காங்.,

பயங்கரவாதிகளின் அனுதாபி

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு, தேசமே அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், ராகுலின் கருத்து, அந்த வீரர்களின் தியாகத்தை அவமானப்படுத்துவது போல உள்ளது. அவர் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் அனுதாபி என்பது தெரியும். உண்மை குற்றவாளிகளான பாகிஸ்தானிடம், ராகுல் என்றைக்குமே கேள்வி கேட்க மாட்டார்.

ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X