சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : பிப் 14, 2020
Advertisement


தொழிலாளரிடம் மொபைல் பறிப்பு


ஸ்ரீபெரும்புதுார்: வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் காமேஷ், 22. இவர், ஸ்ரீபெரும்புதுாரில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து, தொழிற்சாலை பஸ்சில் பயணித்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கியா தொழிற்சாலை அருகே இறங்கி, நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி, காமேஷிடம் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மொபைலை பறித்து சென்றனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மூதாட்டியிடம் செயின் பறிப்பு



கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பிரியா நகரைச் சேர்ந்த சந்தானம் மனைவி ராணி, 65.நேற்று முன்தினம், அப்பகுதி ரேஷன் கடைக்கு நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில், தலைக்கவசம் அணிந்து வந்த வாலிபர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தார்.'தனியார் தங்கும் விடுதியில், உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன்' வாருங்கள் எனக்கூறி, வாகனத்தில், அழைத்துச் சென்றார்.பின், ஆதனுாரில், மூதாட்டியை இறக்கி, அவர் கழுத்திலிருந்த, 7 சவரன் செயினை, வாலிபர் பறித்துச் சென்றார். கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


கஞ்சா விற்ற வாலிபருக்கு, 'காப்பு!'



வல்லம்: செங்கல்பட்டு அடுத்த வல்லம் நடுநிலைப் பள்ளி அருகில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.நேற்று, அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சாந்தி நகரைச் சேர்ந்த பிரபாகரன், 29, என்பவரை சுற்றி வளைத்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின், அவரை கைது செய்தனர்.முதியவர் சடலம் மீட்புகூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், தனியார் திருமண மண்டபம் அருகில், 70 வயது மதிக்கத்தக்க ஆண், நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விபரங்களை, போலீசார் விசாரிக்கின்றனர்.


தனியார் ஊழியர் மரணம்



களியனுார்: வாலாஜாபாத் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமத்தைச்சேர்ந்த நாகப்பன் மகன் சூர்யா, 23; தனியார் தொழிற்சாலை ஊழியர்.நேற்று முன்தினம் இரவு, அதே கிராமத்தைச் சேர்ந்த குமார், 40, என்பவருடன், 'டியோ' இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து முத்தியால்பேட்டைக்கு சென்றார்.களியனுாரில் உள்ள அபாயகரமான வளைவில், வாலாஜாபாதில் இருந்து, காஞ்சிபுரம் சென்ற டிப்பர் லாரி, இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே சூர்யா இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X