கல்பாக்கத்தில் நாளை மாவட்ட சதுரங்க போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்பாக்கத்தில் நாளை மாவட்ட சதுரங்க போட்டி

Added : பிப் 14, 2020
Share

மாமல்லபுரம் : சிறுவர் சதுரங்க, மாவட்ட விளையாட்டுப் போட்டி, கல்பாக்கத்தில், நாளை நடக்கிறது.

கல்பாக்கம், நெஸ்கோ கழகம் மற்றும் முடிச்சூர், திருமால் செஸ் அகாடமி இணைந்து, இப்போட்டியை நடத்துகிறது. கல்பாக்கம், பல்நோக்கு கூடத்தில், காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது.இதில், 8, 10, 12, 16 வயது சிறுவர் - சிறுமியர், பொது போட்டியில், ஆண், பெண் பங்கேற்கலாம்.சிறுவரில், முதல், 20 இடம் பெறுவோர், சிறுமியரில், முதல், 10 இடம் பெறுவோர், பொதுவில், முதல், 30 இடம் பெறுவோருக்கு பரிசளிக்கப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதியினர் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 99943 71069 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X