சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுப்பட்டினத்தில் மின் கோளாறு வீட்டு மின் சாதனங்கள் எரிந்து நாசம்

Added : பிப் 14, 2020
Advertisement

மாமல்லபுரம் : புதுப்பட்டினத்தில், உயரழுத்த மின்சார கோளாறால், வீட்டு உபயோக பொருட்கள், எரிந்து நாசமடைந்தன.

கல்பாக்கம், புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், ராணுவ வீரர் சந்தானம் என்பவரின் வீடு உள்ளது.சந்தானம், நேற்று முன்தினம் இரவு, தன் குடும்பத்தினருடன் வீட்டின் முதல்தளத்தில் உறங்கினார்.நள்ளிரவு, 11:30 மணிக்கு, வீட்டில், வெடி சத்தம் கேட்டு விழித்த மகள், பெற்றோரிடம் தெரிவித்தார்.அவர்கள், சமையலறையில் பார்த்தபோது, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள், தீயில் உருகி, வீடு முழுதும், கரும்புகை சூழ்ந்திருந்தது.

வீட்டிலிருந்து வெளியேறி, திருக்கழுக்குன்றம், தீயணைப்பு நிலையத்திற்கு, சந்தானம் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று, தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.இப்பகுதியில், அடிக்கடி உயரழுத்த மின்சாரத்தால் வீட்டு பொருட்கள் பாதிக்கப்படுவதாகவும், மின்வாரியத்தில் தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை எனுவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X