சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆறு கடைகளில் திருட்டு; செங்கல்பட்டில் அட்டூழியம்

Added : பிப் 14, 2020
Advertisement
 ஆறு கடைகளில் திருட்டு; செங்கல்பட்டில் அட்டூழியம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், ஆறு கடைகளை உடைத்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில், பஜார் வீதி உள்ளது. இங்கு, ரவி என்பவர், மளிகைக் கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, கடையை அடைத்துவிட்டுச் சென்றவர், நேற்று காலை, கடைக்கு வந்தார். அப்போது, 'ஷட்டர்' பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.அதேபோல், இவர் கடை அருகில், மளிகை உள்ளிட்ட கடைகள் வைத்துள்ள கைலாசம், ஜெயபிரகாஷ், ஜெயகுமார், ராஜ்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோரின் கடைகளும் உடைக்கப்பட்டு இருந்தன.

மேற்கண்ட கடைகளின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதில், ரவியின் கடையில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக, அவர், செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மற்ற கடைக்காரர்கள் புகார் கொடுக்காமல், வியாபாரிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.

அடிக்கடி நடக்குது!

காவல் நிலையம் அருகாமையில் உள்ள, பஜார் வீதி கடைகளிலேயே, அடிக்கடி திருட்டுகள் நடக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு கூட, மேற்கண்ட பகுதியில், இரண்டு கடைகளை உடைத்து, மர்ம நபர்கள், பணத்தை திருடிச் சென்றனர். திருட்டைக் கண்காணிக்க வேண்டும் என, போலீசாரிடம் வலியுறுத்தினாலும், அவர்கள் கண்டுகொள்வதில்லை. பஜார் பகுதியில் நடக்கும் திருட்டைத் தடுக்க, கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும்.வியாபாரிகள், பஜார் வீதி, செங்கல்பட்டு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X