பொது செய்தி

இந்தியா

ஆந்திரா, தெலுங்கானா நிறுவனங்கள்

Added : பிப் 14, 2020
Advertisement

ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மூன்று உள்கட்டமைப்பு நிறுவனங்கள், ௨,௦௦௦ கோடி ரூபாய்க்கும் மேல், வருமானத்தை கணக்கில் காட்டாதது, வருமான வரித் துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனைஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியும், தெலுங்கானாவில் முதல்வர் சந்திர சேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியும் நடைபெறுகிறது.இங்கு, ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினத்திலும் மற்றும் டில்லி, புனேயிலும் செயல்படும், மூன்று உள்கட்டமைப்பு நிறுவனங்களில், ௬ம் தேதி, வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஐதராபாத், விஜயவாடா, விசாகபட்டினம, டில்லி, புனே உள்ளிட்ட இடங்களில், 6ம் தேதி, ௪௦க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கண்டறியப்பட்ட மின்னஞ்சல்கள், 'வாட்ஸ்ஆப்' செய்திகள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் வழியாக, போலி நிறுவனங்களுக்கு ஒப்பந்த வேலை கொடுத்ததாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.பறிமுதல்இதன் மூலம், அந்த நிறுவனங்கள், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டாமல் வருமானம் ஈட்டியுள்ளன; அதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து, 85 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 25க்கும் மேற்பட்ட, வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X