அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Tamilnadu, Budget, OPS,NirbayaFund, CCTV, GovtBus, FinanceMinister, தமிழகம், தமிழ்நாடு, பட்ஜெட், நிர்பயா, திட்டம், சிசிடிவி, கண்காணிப்பு, அரசுபேருந்து,

பட்ஜெட்டில், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக, 5,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர், பழநி, தஞ்சாவூர் கோட்டங்களில், பராமரிப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், கோபிச்செட்டிப்பாளையம் கோட்டமும் ஒப்பந்த முறையில் கொண்டு வரப்படும். கிராமப்புற ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின், நான்காம் கட்ட தரம் உயர்த்தும் பணி துவங்கப்படும். 1,500 கி.மீ., நீள சாலைகளை மேம்படுத்த, 1,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் கடன் உதவியுடன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின், இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு, 615.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தில், 655 கி.மீ., நீள சாலைகள், 6,448 கோடி ரூபாயில் வலுப்படுத்தப்படும். சாலைகளை அகலப்படுத்தி, புறவழிச் சாலைகளை அமைக்க, தேவையான நில எடுப்பு பணிகள் நடக்கின்றன. இதற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சென்னை சுற்றுவட்டச் சாலைத் திட்டம், 12 ஆயிரத்து, 301 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். அதன் முதல் கட்டமாக, எண்ணுார் துறைமுகம் முதல், தச்சூர் வரையிலான நில எடுப்பு பணிக்கு, 951 கோடி ரூபாய் தேவை. இதன் முதல் கட்டப் பணிக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின், 2,673 கோடி ரூபாய் கடனுதவியுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின், இரண்டாம், மூன்றாம் கட்டத்தில், தச்சூர் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரையிலான பணிகளுக்கு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின், சர்வதேச வளர்ச்சி நிதியம் ஆகியவற்றின், 3,346.49 கோடி ரூபாய் கடன் உதவி பெறப்பட உள்ளது. இதற்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில், நெரிசலை குறைக்கவும், பாதசாரிகளை பாதுகாக்கவும், 4,257 கோடி ரூபாயில், 'சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டம்' தயாரிக்கப்பட்டு, புதிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. இதற்காக, 1,122 கோடி ரூபாய் செலவில், நிலம் கையகப்படுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது.

கோவை விமான நிலையத்திலிருந்து, உப்பிலிபாளையம் வரை உள்ள, அவினாசி சாலையில், 1,620 கோடி ரூபாய் செலவில், 10.1 கி.மீ., நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், நெடுஞ்சாலைத் துறைக்கு, 15 ஆயிரத்து, 850.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.12,061 கோடி


தமிழகத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, நிதி பகிர்வாக, 12 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில நிதி குழு பரிந்துரை படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி பகிர்வாக, 2020 - 21 நிதி ஆண்டில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, 5,306 கோடி ரூபாய்; ஊரக உள்ளாட்சிகளுக்கு, 6,754 கோடி ரூபாயும் வழங்க, நிதி ஒதுக்கப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில், அத்தியாவசிய அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, 2020 - 21 நிதி ஆண்டில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.


ஆதிதிராவிடர் துறைக்கு ரூ.4,109 கோடி


ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கு, பட்ஜெட்டில், 4,109 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில், 2,018.24 கோடி ரூபாய், அவர்களின் கல்வி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், 49.60 கோடி ரூபாய் செலவில், தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.
உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மாநில அரசால் ஏற்றுக்கொள்ள வேண்டிய தொகை, மிக அதிகமாக உயர்த்தப்பட்டு, 1,526.46 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இத்திட்டத்திற்கான தொகையை, மத்திய அரசு கணிசமாக குறைந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள், 60:40 என்ற விகிதத்தில் செலவை ஏற்க வேண்டும் என, மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப் பட்டுஉள்ளது. மாணவர்களின் உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கு, 2020 - 21 பட்ஜெட்டில், 1,949.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான, 15 விடுதிகள், 16.30 கோடி ரூபாய் செலவில், கல்லுாரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும். ஆதிதிராவிடர் விடுதிகள் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு, 6:89 கோடியில் இருந்து, 15 கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கி உதவியுடன், 106.29 கோடி ரூபாய் செலவில், 223 ஆதிதிராவிடர் நல பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.


நீதித் துறைக்கு ரூ.1,403 கோடி


புதிய கட்டடம் கட்டுதல் உட்பட, நீதி நிர்வாகத்திற்கு, 1,403 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2011 - 2019 வரையில், சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட, 494 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக, 16 சிறப்பு, 'போக்சோ' நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,317 கோடி ரூபாய் செலவில், நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகள் உட்பட, பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடங்கள் கட்டுதல் உட்பட, நீதி நிர்வாகத்திற்கு 1,403.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல கொள்கை விரைவில் வெளியீடு தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டங்களுக்கு, 140.97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களால், கடந்த ஆண்டு, 1 லட்சத்து, 4,795 பேர் பயன் அடைந்துள்ளனர். இதற்கு, 726.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிருக்கான, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில், இதுவரை, 1.88 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதற்காக, 253.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, சென்னையில், எட்டு; கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், தலா ஒன்று என, 13 விடுதிகள் கட்ட வேண்டியது கண்டறியப்பட்டுள்ளது.
மகளிர் நலத் திட்டங்களுக்காக, 78 ஆயிரத்து, 796.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்துக்காக, 1,863.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக, 2,535.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக, புதிதாக, மாநில குழந்தைகள் நலக் கொள்கை வெளியிடப்படும். சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்காக, 175.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் 2ம் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி
மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்துக்கு, தமிழக பட்ஜெட்டில், 3,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை, மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ.,க்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, மாதவரம் - சென்னை புறநகர் பஸ் நிலையம், மாதவரம் - சோழிங்கநல்லுார் வரை, 52.01 கி.மீ., பாதை அமைக்க, நிதி உதவி வழங்க, ஜப்பான் பான்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான திட்ட வடிவமைப்புகள் தயாராக உள்ளதால், இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும்.

இரண்டாவது திட்டத்தில் மீதமுள்ள, சென்னை புறநகர் பஸ் நிலையம் - சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை, மெட்ரோ ரயில் பாதை அமைக்க, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகிய, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து, நிதி திரட்டும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்திற்கு, மத்திய அரசு, 50 சதவீதம் பங்கு மூலதனம் வழங்கியது போல், இரண்டாவது கட்ட திட்டத்துக்கும், 50 சதவீதம் பங்கு மூலதனம் வழங்க, மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்துக்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும், வெளிநாட்டுகடனை விடுவிப்பதற்காக மொத்தம், 3,100 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranjithpriya - karur,இந்தியா
15-பிப்-202016:42:01 IST Report Abuse
Ranjithpriya மண்ணிக்கவும் எனக்கு புரியாததால் நான் கேட்க்கிறேன் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு ரூ.5 கோடி ஒதுக்கீடு சரி. பிறகு எதற்கு சுங்க சாவடி வரி. சாலை வரி. அப்படி எங்களிடம் இருந்து முன்னமாக பெறப்பட்ட வரியால் தான் இதை சரி செய்கிறோம் என்றல் இதை தனியாரிடம் எதற்கு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
15-பிப்-202015:34:20 IST Report Abuse
Srinivas ஆமாம் அந்த எட்டுவழிச்சாலை என்னாச்சு? ஒதுக்கவேண்டிய கட்டிங் ஒதுக்கியாச்சு... இனிமேல் திட்டம் குப்பையில் தான்னு செய்தி வருதே... உண்மையா. எதிர்த்த மாங்காய்கள் இப்போ கூட்டணியில் இருப்பதால் யாரும் கேட்கபோவது இல்லை..
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-பிப்-202008:05:38 IST Report Abuse
RajanRajan நதி நீர் இணைப்புக்கு இந்த பணத்தை செலவு பண்ணி விவசாயத்தை பாதுகாக்க வழிபண்ணுங்க மவராசனுங்களா. ஆட்டையபோடுற இடமா பார்த்து பார்த்துள்ளே பட்ஜெட் போவுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X