பொது செய்தி

இந்தியா

காதலர் தின பரிசு பிரதமருக்கு அழைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

புதுடில்லி: 'பிரதமர் மோடி, போராட்ட இடத்திற்கு வந்து, காதலர் தினத்திற்கான பரிசை தங்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்,' என, டில்லியின் ஷாகீன் பாக் பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்கள், சமூக வலைதளம் மூலமாக கூறிஇருக்கின்றனர்.

டில்லியில் உள்ள ஷாகீன் பாகில், டிச.,௧௫ முதல், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெறுகிறது.போராட்டத்தில் பங்கேற்றுள்ளோர், 'காதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்' என, பிரதமர் மோடிக்கு நேற்று அழைப்பு விடுத்துஇருந்தனர். இதுதொடர்பாக, டில்லியில், 'போஸ்டர்'கள் ஒட்டியதுடன், 'பிரதமர் மோடி, எங்களுடன் கலந்துரையாடிவிட்டு, பரிசை வாங்கிச் செல்ல வேண்டும்' என சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு இருந்தனர்.

இதுபற்றி, ஷாகீன் பாக் போராட்டத்தில் துவக்கம் முதல் பங்கேற்றுள்ள சையத் தாசீர் அகமது கூறியதாவது:மத்திய அரசின் நடவடிக்கைகள், அரசியல்அமைப்பிற்கு எதிரானது அல்ல என, பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை நம்பச் செய்தால், நாங்கள் போராட்டத்தை முடித்து கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கார்கி கல்லுாரியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோரை ஆதரித்தும், டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில், நேற்று பேரணி நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X