சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் விழுந்ததில் தகராறு இளம்பெண் கொலை

Added : பிப் 14, 2020
Advertisement

வெள்ளவேடு : வெள்ளவேடு அருகே, மரம் முறிந்து விழுந்ததில், இரு வீட்டார் இடையே ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தி, இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த, திருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 38. இவர் மனைவி கலைவாணி, 27. இவர்களுக்கு, 7 வயது, 5 வயதில், இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.செந்தில்குமாருக்கும், இவர் வீட்டின் அருகே வசிக்கும் ரத்னம் மகன் ராமன், 50, என்பவருக்கும் இடையே, நில பிரச்னை இருந்து வந்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ராமன் வீட்டில் உள்ள முருங்கை மரம் முறிந்து, செந்தில்குமார் வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனால், ராமனுக்கும், கலைவாணிக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது; அப்போது, செந்தில்குமார் வீட்டில் இல்லை.

தகராறில் ஆத்திரமடைந்த ராமன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, கலைவாணியின் வயிற்றில் பலமாக குத்தினார். படுகாயமடைந்த கலைவாணியை, உறவினர்கள் மீட்டு, திருவள்ளூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கலைவாணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து, செந்தில்குமார் புகாரை, வெள்ளவேடு போலீசார் விசாரித்து, ராமனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X