பொது செய்தி

தமிழ்நாடு

உலக வங்கி குழுவினர் பெருமாநல்லுாரில் ஆய்வு

Added : பிப் 14, 2020
Advertisement

திருத்தணி : உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்கும் திட்டங்களை, உலக வங்கி குழுவினர், நேற்று, நேரில் ஆய்வு செய்தனர்.

திருத்தணி கோட்டத்தில், பள்ளிப்பட்டு நகரியாறு உபரிநீர் பிடிப்பில் உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை, பெருமாநல்லுார் ஆகிய பகுதிகளில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ், அரசின் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.இதில், உலக வங்கி நிதியுதவியுடன், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல், கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், கறவை மாடுகளுக்கு தாதுஉப்பு கலவை வழங்குதல் போன்ற சிகிச்சைகள், கால்நடைத் துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன.இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக, உலக வங்கியில் இருந்து வந்துள்ள இரு வல்லுனர்கள் அடங்கிய குழுவினர், பெருமாநல்லுார் மற்றும் கொத்தகுப்பம் பகுதியில், நேற்று, ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டனர்.தொடர்ந்து, வல்லுனர் குழுவினர், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X