நாளை பதவியேற்பு விழா மோடிக்கு கெஜ்ரி அழைப்பு

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 நாளை பதவியேற்பு விழா மோடிக்கு கெஜ்ரி அழைப்பு

புதுடில்லி: டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவ்விழாவில் கலந்து கொள்ள வருமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கஉள்ளது. நாளை காலை, 10:00 மணிக்கு, ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் அந்த பதவியேற்பு விழாவில், கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளார்; புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், அவ்விழாவில் கலந்துகொள்ள, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் டில்லி ஒருங்கிணைப்பாளர் ராய் கூறியதாவது:பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டில்லியின் எம்.பி.,க்களுக்கும், புதிய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இது, டில்லியை சார்ந்த விழா என்பதால், மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு, டில்லி மக்களுக்கும், கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். டில்லியில் வெளியாகும் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில், அந்த விழா அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
15-பிப்-202015:55:51 IST Report Abuse
Vijay D Ratnam 'என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு'. இவரு நன்றியுள்ள மனிதர்னா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அழைத்து இருக்க வேண்டும். தனக்கு இரன்டு கண்களும் போனாலும் பரவாயில்லை, பாஜகவுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைத்து தன் ஆதரவு வாக்காளர்களையே ஆம் ஆத்மீக்கு கைமாற்றிவிட்ட ராகுலை அழைக்க வேண்டும். டெல்லியில் கணிசமான வாக்குகளை வைத்திருந்த மாயாவதிக்கு, அகிலேஷ் யாதவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். எதிரியை ஏன் அழைத்து ஏழரையை கூட்டவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-202005:36:21 IST Report Abuse
J.V. Iyer கெஜ்ரிவால் திருந்தி இருப்பதாக தெரிகிறது. பாஜகவுடன் இணைந்து செயல்பட்டால், டெல்லியின் வளர்ச்சிக்கு உதவலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X