பொது செய்தி

தமிழ்நாடு

கரும்புக்கான நிலுவை தொகை எங்கே? குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

Added : பிப் 14, 2020
Advertisement

திருத்தணி : திருத்தணி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

திருத்தணி, ஆர்.கே.பேட்டை தாசில்தார் உட்பட, பல்துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், விவசாயிகள் கூறியதாவது:திருத்தணி, கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்புகள் அனுப்பிய விவசாயிகளுக்கு, நிலுவைத் தொகை வழங்கவில்லை; எப்போது கிடைக்கும்.ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். வேளாண் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு தெரிவிப்பதில்லை.

இதுவரை நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, திருத்தணி,கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் மற்றும் நான்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏன் பங்கேற்வில்லை.குறிப்பாக, கூட்டத்திற்கு, துறை உயர் அதிகாரிகள் வராமல், தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.இனிவரும் காலங்களில், துறை உயர்அதிகாரிகள் வராமல், கூட்டம் நடத்தக்கூடாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்

.திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், 28 பேர் கோரிக்கை மனு அளித்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று, திருவள்ளூரில் நடந்த கூட்டத்திற்கு, கோட்டாட்சியர் வித்யா தலைமை வகித்தார். அனைத்து தாசில்தார், வேளாண் துறை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு கண்டனர்.இக்கூட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், வரத்து கால்வாய் சீரமைத்தல் உட்பட, 28 மனுக்களை அளித்தனர். அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கோட்டாட்சியர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X