சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி கேட்டு இருளர்கள் போராட்டம்

Added : பிப் 14, 2020
Advertisement

திருத்தணி : அடிப்படை வசதி கேட்டு, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை, இருளர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

திருத்தணி தாலுகா, தாழவேடு, காஞ்சிப்பாடி, எல்.என்.கண்டிகை, வி.கே.என்.கண்டிகை, டி.புதுார் ஆகிய பகுதிகளில் வசிக்கும், இருளர்கள் வசிக்கின்றனர்.இவர்களில், 15 ஆண்கள் உட்பட, 75க்கும் மேற்பட்டோர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு, நேற்று, போராட்டம் நடத்தினர்.'எங்களுக்கு குடிநீர், மின்சாரம், சுடுகாடு பாதை, ஜாதி சான்று போன்றவை கிடைக்காததால், மிகவும் பாதிக்கப்படுகிறோம். அரசு எவ்வித வசதியும் செய்து தரவில்லை' என, பெண்கள், ஒப்பாரி வைத்தனர்.

ஆண்கள், மேல் சட்டை இல்லாமல், அரை நிர்வாணத்துடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.பின், தங்களின் கோரிக்கை மனுக்களை, பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயனிடம் கொடுத்தனர்.மனுக்களை பெற்ற அவர், விரைவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என, உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X