சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பழம் விற்கும் எனக்கு 'பத்மஸ்ரீ' விருது!

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 பழம் விற்கும் எனக்கு 'பத்மஸ்ரீ' விருது!

சொந்த கிராம மக்களுக்கு, பள்ளிக்கூடம் மற்றும் பிற தேவையான உதவிகளை செய்து வருவதற்காக, மத்திய அரசின், 'பத்மஸ்ரீ' விருது பெற்றுள்ள, 68 வயது, ஏழை வியாபாரி ஹரேகலா ஹஜப்பா: கர்நாடகா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள மங்களூருக்கு அருகில் உள்ளது என் கிராமம், நியூபடப்பா. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான்; குடும்பத்துடன் இணைந்து, விவசாயம் தான் செய்து வந்தேன்.

ஒரு கட்டத்தில், விவசாயத்தை தவிர்த்து, மாற்று வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த, 1990ம் ஆண்டிலிருந்து, எங்கள் ஊரிலிருந்து, 25 கி.மீ.,யில் உள்ள, மங்களூரு நகருக்கு சென்று, காய்கறிகள் விற்பனை செய்யத் துவங்கினேன். இப்போது, ஆரஞ்சு பழ வியாபாரத்தை மேற்கொள்கிறேன். எனக்கு படிப்பறிவே கிடையாது. கன்னடம் எழுத, படிக்க தெரியாது. ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் கூட புரியாது. ஒரு நாள், என்னிடம் பழம் வாங்க வந்த வெளிநாட்டு தம்பதி, பழத்தின் விலை குறித்து கேட்டதற்கு, பதில் சொல்ல முடியாமல் தவித்து, அப்படியே இருந்து விட்டேன். அது, வெட்கத்தை ஏற்படுத்தியது; என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. நம் போல, நம் கிராமத்து குழந்தைகளும், படிப்பறிவு இல்லாமல் போய் விடக் கூடாது என, நினைத்தேன்.

பள்ளிக்கூடம் துவக்குவதற்கான பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நண்பர்கள், உறவினர்களிடம் பேசி, கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை துவக்கினேன். எங்கள் கிராமத்திலிருந்த மசூதியின் ஒரு பகுதியை, பள்ளிக்கூடமாக மாற்றினோம். அதில், 28 மாணவர்கள் சேர்ந்தனர்.துவக்கத்தில், பகுதி நேரமாக செயல்பட்ட அந்தப் பள்ளி, இப்போது முழுநேரமாக செயல்படுகிறது; காலப் போக்கில், உயர் நிலைப் பள்ளியாகவும் மாறி விட்டது. ஏராள மான குழந்தைகள் படிக்கின்றனர். பழ வியாபாரத்தை பார்த்துக் கொண்டே, எங்கள் கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற, அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். என் முயற்சியால், எங்கள் கிராமம் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது, மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, மாணவர்கள் குடிக்க, காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை வழங்குவது என, மாணவர்கள் எளிதாக படிக்க, இதமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறேன்.இதை அறிந்த அதிகாரிகள், எனக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். சமீபத்தில், டில்லி சென்று, அந்த விருதை பெற்று வந்தேன். இதெல்லாம், சுயநலம் பாராத, என் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Panchalingam - Toronto,கனடா
15-பிப்-202007:59:15 IST Report Abuse
Siva Panchalingam "பத்மஸ்ரீ" விருது சரியான இடத்தில் சரியான நபருக்கு வழங்கி உள்ளார்கள் .வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-202005:38:55 IST Report Abuse
J.V. Iyer பெரியவரே உங்களை தலை வணங்குகிறோம். உங்களைப்போன்றவர்களின் செயலால்தான் இந்தியா பெருமை அடைகிறது.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-பிப்-202005:13:32 IST Report Abuse
meenakshisundaram கோபாலபுரம் ஜமீன் கவனிக்க, பொது நலனுக்கு பாடுபட்டவருக்கு 'பத்மஸ்ரீ'. பொது சொத்தை கொள்ளை அடித்தவனுக்கு?
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
15-பிப்-202018:07:08 IST Report Abuse
dandyகட்டுமரம் பாரத ரத்னா கேட்டதாம் ..ஹி ஹி ஹி ..அப்துல் கலாம் ஆப்பு வைத்துவிட்டார் ..இந்த படடத்திற்கு ஏற்படவிருந்த களங்கம் நீக்கப்பட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X