விருதை அரசு ஆண்கள் பள்ளியில் பாழாகி வரும் விளையாட்டு மைதானம்

Added : பிப் 14, 2020
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாழாகி வரும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு வாலிபால், கால்பந்து, கோ-கோ, எறிபந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் கற்றுத் தரப் படுகின்றன.இதற்காக, பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வட்டார அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி முட்செடிகள் மண்டி, மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால் மாணவர்கள் உடற்கல்வி பாட வகுப்புகளில் விளையாட முடியாமல் முடங்கும் அவலம் தொடர்கிறது.பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் பெருக்கமடைந்து வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சமடைந்து உள்ளனர். ஆங்காங்கே கற்கள் சிதறி கிடப்பதால் மாணவர்கள் கால்களை பதம்பார்க்கும் நிலை உள்ளது.எனவே, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பராமரிப்பின்றி பாழாகி வரும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X