ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு புலனாய்வு நிலவரம் தாக்கல்

Added : பிப் 14, 2020
Advertisement

புதுடில்லி: ஏர்செல் -- மேக்சிஸ் முறைகேடு வழக்கின் புலனாய்வு நிலவரத்தை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, டில்லி, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.

கடந்த, 2006ல், மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, அவர் மகன் கார்த்தி, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவன முதலீட்டிற்கு அனுமதி பெற்று, நிதி ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, இருவர் மீதும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, லஞ்ச ஊழல் மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளன.

இந்த வழக்கை விசாரித்து வந்த தனி நீதிமன்றம், 2019 செப்., 5ல், விசாரணையை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை, இந்தாண்டு, ஜன., 28-ம் தேதி தாமாக முன்வந்து விசாரிக்க துவங்கியது. அப்போது, வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என, நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளிக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, இரு வாரம் அவகாசம் கோரின. இந்த அவகாசம் முடிந்து, நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., அமலாக்கத் துறையினர், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில், வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவ தாக, அமலாக்கத் துறை தெரிவித்தது.வழக்கு தொடர்பான தகவல்களை வழங்கக் கோரி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மலேஷிய புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., தெரிவித்தது. இந்நிலையில்,சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மார்ச், 4ல் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X