வினய் குமாரின் மனு, டிஸ்மிஸ் நிர்பயா வழக்கில் கோர்ட் அதிரடி| Dinamalar

வினய் குமாரின் மனு, 'டிஸ்மிஸ்' நிர்பயா வழக்கில் கோர்ட் அதிரடி

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (10)
Share
nirbhaya,nirbhayacase,Delhi_gang_rape,SC,SupremeCourt,நிர்பயா

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கின் குற்றவாளியான, வினய் குமார் சர்மா, தன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.தாமதம்டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும் சட்டச் சிக்கல் காரணமாக தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. நான்கு பேரும், மாறி மாறி, கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்து, தண்டனை நிறைவேற்றுவதை தாமதிக்கின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா, தன் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது, கடந்த சில நாட்களாக காரசாரமாக வாதங்கள் நடந்தன.

நீதிபதிகள், ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து, வினய் குமார் தாக்கல் செய்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை. தண்டனையை தாமதிக்கும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கு மனநிலை சரியில்லை என, வினய் குமார் கூறுவதை ஏற்க முடியாது. அவரது மனநிலையும், உடல்நிலையும் நன்றாக இருப்பதை, மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது.ஆவணங்களும் தாக்கல்கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதியிடம் அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பரிசீலித்த பின்பே, மனுவை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். எனவே, வினய் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கின் குற்றவாளிகளில் பவன் குப்தா மட்டுமே, இன்னும் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. மற்றவர்களின் மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

நீதிபதி மயக்கம்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தனித்தனியே துாக்கிலிட அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி ஆர்.பானுமதி, நேற்று விசாரித்தார். அப்போது, நீதிபதி திடீரென மயங்கினார். இதையடுத்து, நீதிபதிகள் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின், சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு, சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதி நலமுடன் இருப்பதாக, பின் அறிவிக்கப்பட்டது.

மர்ம பையால் பரபரப்பு

உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அறை எண், 4க்கு வெளியில், நேற்று, ஒரு பை, கேட்பாரற்று கிடந்தது. அதிலிருந்து, 'பீப்' என்ற சத்தம் வந்தது. இதனால், அந்த பையில் வெடிகுண்டு இருக்கலாம் என, பீதி எழுந்தது. பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனையிட்டபோது, பைக்குள், 'மொபைல் போன்'களை சார்ஜ் செய்ய பயன்படும், 'பவர் பேங்க்' மட்டும் இருந்தது. இந்த சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டாலும்,விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X