பொது செய்தி

தமிழ்நாடு

நெல் வயலில் அறுவடை சோதனை

Added : பிப் 14, 2020
Advertisement
 நெல் வயலில் அறுவடை சோதனை

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே, மண் மாதிரி சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயலில், சோதனை அறுவடை நடந்தது.

அண்ணா கிராமம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில், மண்வள அட்டை வழங்கிய மாதிரி கிராமம் சித்தரசூரில் நெல் அறுவடை திருவிழா நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தேசிய நீடித்த வேளாண்மை இயக்கத்தின் கீழ், சித்தரசூர் கிராமத்தை முன்னோடி கிராமமாக தேர்வு செய்து, விவசாய நிலங்களில் மண் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மண்ணின் தன்மைக்கேற்ப தேவையான அளவு மட்டுமே உரமிடுவதால், சிக்கனமாக உரத்தை பயன்படுத்துவதோடு மண்ணின் மலட்டுதன்மை ஏற்படாது என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மண் பரிசோதனை செய்யாமல், பயிர் செய்த வயலிலும் பரிசோதனை அடிப்படையில் அறுவடை செய்தனர்.இதில் மண் பரிசோதனை அடிப்படையில் பயிர் செய்த வயலில், அதிகளவு மகசூல் கிடைத்தது.

எனவே, மண் பரிசோதனை அடிப்படையில் பயிர் செய்ய வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தினர். வேளாண்மை அலுவலர்கள் செல்வி, தேன்மொழி, உதவி அலுவலர்கள் பாஸ்கர்ராஜ், திருவேங்கடம், ரஞ்சனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X