'கோவிட் - 19' தாக்குதலுக்கு 1,500 பேர் பலி

Added : பிப் 14, 2020
Advertisement

பீஜிங்: கிழக்காசிய நாடான சீனாவில், 'கோவிட் - 19' என பெயரிடப்பட்டுள்ள, 'கொரோனா வைரஸ்' தாக்கு தலுக்கு, பலியானோர் எண்ணிக்கை, 1,500 ஆக உயர்ந்தது.

நேற்று முன் தினம் மட்டும், 121 பேர் பலியாகினர். மொத்தம், 65 ஆயிரம் பேர், இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரவத் துவங்கிய, 'கோவிட் - 19' வைரஸ், ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை குடித்து வருவதோடு, பல்வேறு நாடுகளுக்கும் பரவத் துவங்கி உள்ளது.

65 ஆயிரம்இதில், ஹூபெய் மாகாணம் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 121 பேர் பலியாகினர், 5,090 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 116 பேர், ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இதன் மூலம், கோவிட் - 19 தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 65 ஆயிரமாக உயர்ந்தது.'கோவிட் - 19 சிகிச்சையில் ஈடுபட்டுள்ள ஆறு மருத்துவ ஊழியர்கள், வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இறந்தனர்;

மேலும், 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, தகவல் வெளியாகி உள்ளது.கப்பல் பயணியர்கிழக்காசிய நாடான ஜப்பானின், யோக்கோஹோமா கடல் பகுதியில் தனிமைபடுத்தப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' சொகுசு கப்பலில் உள்ள, 3,700 பயணியர் மற்றும் ஊழியர்களில், 218 பேருக்கு கோவிட் - 19 பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 10 பேரின் நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே, இந்தியாவை சேர்ந்த கப்பல் ஊழியர்கள் இருவருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில், மூன்றாவதாக ஓர் இந்திய ஊழியருக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பது நேற்று உறுதியானது. மூவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தேறி வருவதாக, இந்திய துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த கப்பலில் இருக்கும், நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர், 80 வயதைக் கடந்தவர்கள். எனவே, அவர்களுக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. கோவிட் - 19 பாதிப்பு இல்லாதவர்கள், அரசு ஏற்பாடு செய்திருந்த இடத்தில், தங்க வைக்கப்பட்டனர்.

இந்த கப்பலைத் தவிர, ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், 33 பேருக்கு, கோவிட் - 19 தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து, 1,455 பயணியர், 802 ஊழியர்களுடன், அமெரிக்காவின் சொகுசு கப்பலான 'வெஸ்டர்டாம்', கடந்த 1ல் புறப்பட்டது. அனுமதி மறுப்புஇன்று ஜப்பானில் கரை ஒதுங்க வேண்டிய கப்பலுக்கு, ஜப்பான், தாய்லாந்து, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் அனுமதி மறுத்தன. 'கப்பலில் யாருக்கும் கோவிட் - 19 பாதிப்பு இல்லை' என தெளிவுபடுத்தியும், அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், கிழக்காசிய நாடான கம்போடியா, தங்கள் நாட்டில் கரை ஒதுங்க கப்பலுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, அமெரிக்க சொகுசு கப்பல், நேற்று கம்போடியா வந்து சேர்ந்தது. அதில் இருந்து 500 பயணியர், முதல்கட்டமாக, விமானம் மூலம், சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இறைச்சி கூடங்களுக்கு கட்டுப்பாடு!'கோவிட் - 19' மனிதர்களை எப்படி தாக்கியது என்பது குறித்து, இன்னும் தெளிவாக தெரியாத நிலையில், அதை பற்றிய ஆராய்ச்சியில், சீனா ஈடுபட்டுள்ளது. வவ்வாலில் இருந்து, வேறொரு விலங்கிற்கு பரவி, அந்த விலங்கு மூலம், மனிதனுக்கு பரவி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. சீனாவை பொறுத்தவரை, ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சிகளை தவிர, அரிதான சில வன விலங்குகளை உண்ணும் பழக்கம், பணக்காரர் கள் மத்தியில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.'நாய், பூனை, பாம்பு, எலி, எறும்பு திண்ணி, புனுகுப்பூனை, சிறிய முதலைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளை அவர்கள் விரும்பி உண்ணுகின்றனர்.

'இதற்கான சந்தையில், விலங்குகள் உயிருடன் வைக்கப்பட்டு, வாடிக்கையாளர் முன்னிலையில் வெட்டி விற்பனை செய்யப்படுகின்றன. 'அப்படிப்பட்ட நேரத்தில், அதன் ரத்தம் மனித உடலில் சிந்தி, கோவிட் - 19 பரவி இருக்கலாம்' என, நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இறைச்சி கூடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும், சட்ட விரோதமாக வேட்டையாடப்படும் விலங்குகள் விற்பனைக்கு அனுமதி மறுக்கவும், சீனா பரிசீலித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X