அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க ரூ.1,200 கோடி

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Tamilnadu, Budget, OPS,NirbayaFund, CCTV, GovtBus, FinanceMinister, தமிழகம், தமிழ்நாடு, பட்ஜெட், நிர்பயா, திட்டம், சிசிடிவி, கண்காணிப்பு, அரசுபேருந்து,

சென்னை : தமிழக சுகாதாரத்துறைக்கு, பட்ஜெட்டில், 15 ஆயிரத்து, 863.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 3,299.54 கோடி ரூபாய் அதிகம். புதிதாக, 11 மருத்துவ கல்லுாரிகள் அமைக்கும் பணிக்கு, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.


மகப்பேறு உதவி


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கர்ப்பிணியருக்கு, இரண்டு பேறுகாலம் வரை, 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், இதுவரை, 60.64 லட்சம் கர்ப்பிணியர், 6,033.81 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர். மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், மத்திய அரசின், 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக, மத்திய அரசிடம், 23.10 கோடி ரூபாய் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. மகப்பேறு உதவி திட்டத்தை செயல் படுத்த, 959.21 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. தொற்றா நோய்களின் மேலாண்மையை வலுப்படுத்தவும், தாய் - சேய் சுகாதார சேவைகளை வழங்கவும், 2,857 கோடி ரூபாய் மதிப்பில், சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்திற்கு, பட்ஜெட்டில், 260.14 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.


'கொரோனா' வைரஸ்


'கொரோனா' வைரஸ் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து உபகரணங்கள், முகமூடி மற்றும் மூன்று அடுக்கு முகமூடிகளை கொள்முதல் செய்து, அரசு கையிருப்பில் வைத்துள்ளது.

முதல்வர் காப்பீடு திட்டத்தில், 1.59 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன. 2012ல் இருந்து இதுவரை, 41.12 லட்சம் பயனாளிகள், 6,601.59 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை பெற்றுள்ளனர். இத்திட்டத்தில், 2,453.22 கோடி ரூபாய் செலவில், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. முதல்வர் காப்பீடு திட்டம், மத்திய அரசின், 'பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, காப்பீட்டு தொகை ஆண்டிற்கு, 5 லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, பட்ஜெட்டில், 1,033.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


புதிய மருத்துவ கல்லுாரி

மருத்துவக் கல்லுாரி இல்லாத, 11 மாவட்டங்களில், 3,575 கோடி ரூபாயில், புதிதாக மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தில், புதிதாக, 11 கல்லுாரிகளுக்கான பணிகளுக்கு, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலையுடன் இணைந்த மருத்துவக் கல்லுாரியை, அரசே ஏற்று நடத்தும். இந்த கல்லுாரி, கடலுார் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லுாரியாக அமைக்கப்படும். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகாமையின் நிதியுதவியுடன், 1,634 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், 11 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், 10 மாவட்ட மற்றும் துணை மருத்துவமனைகளுக்கு கட்டடங்கள் கட்டவும், மருத்துவக் கருவிகள் வழங்கவும், 510.15 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. வரும், 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தில், சுகாதாரத்துறைக்கு, 15,863.37 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 3,299.54 கோடி ரூபாய் அதிகம்.


சென்னை பொருளியல் பள்ளிக்கு பல்கலைக்கு இணையான அந்தஸ்து


'சென்னை பொருளியல் பள்ளிக்கு, பல்கலைக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் பொருளியல், வணிகவியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இந்த வகையில், சென்னையில் செயல்படும், தனியார் கல்வி நிறுவனமான, சென்னை பொருளியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது.


'கியூசெட்'


பெரும் கார்பரேட் நிறுவனங்களின் தலைவர்களை, மேலாண் நிர்வாகிகளாக உடைய இந்த, 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' என்ற, சென்னை பொருளியல் பள்ளி, 1993 முதல், சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் உள்ள மத்திய பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில், இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இதில், வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில், பொருளியல் படிக்கின்றனர்.

பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு முடித்து, 'கியூசெட்' என்ற மத்திய பல்கலையின் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சேர முடியும். அதனால், இங்கு தமிழக மாணவர் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது.


தனியாக சட்டம்


இந்நிலையில், சென்னை பொருளியல் பள்ளி கல்வி நிறுவனம், சுயமாகவே பட்டம் மற்றும் டிப்ளமா சான்றிதழ்களை வழங்கும் வகையில், அதற்கு, அதிமுக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற, 'இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பெஷல் இம்பார்டன்ஸ்' என்ற அந்தஸ்தை, தமிழக அரசு வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு, நேற்று தமிழக பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அதில், கூறியிருப்பதாவது: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவில், 1993ம் ஆண்டு, அரசின் சார்பில் நிலம் வழங்கப்பட்டு, சென்னை பொருளியல் பள்ளி அமைக்கப்பட்டு, கோட்டூர் புரத்தில் செயல்படுகிறது. இந்த நிறுவனம் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பெருமையை அங்கீகரிக்கும் வகையிலும், சுயமாக பட்டங்கள் மற்றும் டிப்ளமா படிப்பு சான்றிதழ்களை வழங்கவும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்பதற்கான தரநிலையை வழங்க, தனியாக சட்டம் இயற்றப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பல்கலைகளுக்கு கூடுதல் நிதி


சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை நிதி நெருக்கடிக்கு, பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்புக்கான முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கட்டண சலுகைகள், தொடர்ந்து வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இந்த பணிகளுக்கு, 506.04 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. கோவை அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை கவுரவிக்கும் வகையில், 10 கோடி ரூபாய் சிறப்பு மானியம் வழங்கப்படும்.

பல்கலைகளுக்கு தொகுப்பு மானியமாக வழங்க, 91.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க, 225.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலையின் ஓய்வூதிய நிதி சுமையை சமாளிக்க, சிறப்பு வழங்கலாக, 11.72 கோடி ரூபாய் வழங்கப்படும். பட்ஜெட்டில், உயர்கல்வி பணிக்கு மொத்தம், 5,052.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.


சென்னை, மதுரை, கோவையில் சாலை பாதுகாப்புக்கு தனி பிரிவு


மாநில நெடுஞ்சாலை துறையில், சாலை பாதுகாப்பிற்கு என தனிப்பிரிவு, சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2019ல், சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 38.87 சதவீதமாக குறைந்துள்ளது விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம், சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்ட பின், அவசர சிகிச்சை பிரிவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 8.3 சதவீதத்தில் இருந்து, 2.7 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது, 80 மருத்துவமனைகளில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழக சாலை பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டு, பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படும். இத்திட்டத்தில், சாலை விபத்தில்லா தமிழகம் என்ற, இலக்கை அடைவதற்காக, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து, சாலை பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு, 500 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். சாலை வடிவமைப்பில், சாலை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடங்கி இருப்பதை உறுதி செய்ய, மாநில நெடுஞ்சாலைத் துறையில், சாலை பாதுகாப்பிற்கு, தனி பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில், சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.


உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.2,000 கோடி முதலீடு


மத்திய அரசின் தேசிய உட்கட்டமைப்பு பட்டியலில், தமிழகத்திற்கு பயனளிக்கும் வகையில், 8.58 லட்சம் கோடி ரூபாய் செலவில், 179 திட்டங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு உட்கட்டமைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்க, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டு பெரிய திட்டங்கள், முதலீட்டுக்கான தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம், 2,000 கோடி ரூபாயை, திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக உள்ளது என, பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.


கட்டடங்களுக்கு நிதி


மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு கட்டடங்களை, பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. புதிய கட்டடங்களின் கட்டுமானத்திற்கு, 1,453 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. பல அரசு அலுவலகங்கள் பாரம்பரிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றின் சீரமைப்பு பணிக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாபேட்டையில் உள்ள, அரசு ஊழியர்களின் குடியிருப்பு வளாக வடிவமைப்பை மேம்படுத்தவும், சிறப்பான வசதிகளை ஏற்படுத்தவும் திட்டம் தயாரிக்கப்படும். அரசு ஊழியர்களின் வாடகை வீட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு, 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும். இதில், 24 கோடி ரூபாய் செலவில், குடியிருப்போருக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-202007:49:22 IST Report Abuse
ஆரூர் ரங் நோய்க்கு காரணிகளான சாக்கடை மாசு, குப்பைகளை சரிசெய்வதற்கு பதிலாக கூடுதல் மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் ஏற்படுத்தும் திமுகபாணி தொடருகிறது
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
15-பிப்-202006:20:12 IST Report Abuse
blocked user டாஸ்மாக்கை மூடி விட்டால் புண்ணியமாகப்போகும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X