சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு ; வடசென்னை ஸ்தம்பிப்பு

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (4)
Advertisement
போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு ; வடசென்னை ஸ்தம்பிப்பு

வண்ணாரப்பேட்டை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு, நேற்று மதியம் துவங்கி, இரவு வரை போராட்டம் நடத்தினர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியும் கேட்காததால், லேசான தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதையடுத்து, ஆண், பெண் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் குவிந்தனர்.இரவு தொடர்ந்த போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளால், பதற்றம் தொற்றியது. இதையடுத்து, போலீசார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர். இதில், முதியவர் உயிரிழந்தார்.

போலீசார் தரப்பில், வடக்கு மண்டல இணை ஆணையர் உட்பட, மூன்று போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். இதற்கிடையில், வண்ணாரப் பேட்டை சம்பவத்தை கண்டித்து, சென்னையில் பல இடங்களில் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-202019:56:09 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Mohandas Gandhis mistake today haunting Hindustan. These stupid dont even know what is CAA. My question to These foreign religion people, Why you are silent when your religion people kill Hindus in those three countries? Why silent? Why dont you tell them dont kill? because of this action, many Hindus started to hate you. Dont fall for DMK lies.
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-202016:21:10 IST Report Abuse
ManiS For vote bank DMK can do anything
Rate this:
Share this comment
Cancel
Magath - Chennai,இந்தியா
15-பிப்-202011:28:30 IST Report Abuse
Magath போராடுபவர்கள் அம்பு மட்டுமே. ஏய்த்து திமுக. சுடலை தான் தனியா எதுவும் யோசிக்க தெரியாமல் கார்ப்பரேட் பூதத்தின் கைக்கூலி ஆகிவிட்டாரே. இவரும் பொம்மலாட்ட பொம்மையே. உடன்பிறப்புகள் புரிந்து கொண்டால் சரி. சமீபத்திய அதிமுகவின் மக்கள் நல அறிவிப்புகளை மக்கள் பேசுகின்றனர் . இதை திசைதிருப்ப சுடலை முஸ்லீம்களை பலிகடா ஆக்குகிறார். ஒருநாளாவது அந்த சேர் ல உட்காரும் நோக்கம் இது தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X