பொது செய்தி

தமிழ்நாடு

முந்திரி தொழிலை மீட்க நடவடிக்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

Added : பிப் 15, 2020
Advertisement
 முந்திரி தொழிலை மீட்க நடவடிக்கை  ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

பண்ருட்டி:முந்திரி தொழிலை மீட்க பல்வேறு புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி ஆகியோர் மத்திய தொழில் துறை இணை செயலாளர் பிரவின் குமாரை டில்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பாரம்பரியமிக்க முந்திரி தொழிலில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முந்திரி ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. முந்திரி கொட்டை இறக்குமதிக்கு 2.75 சதவீதம் வரி செலுத்தப்படுகிறது.

வரி செலுத்துவதால், இறக்குமதி வரி இல்லாத நாடுகளுடன் போட்டியிட முடியவில்லை. இறக்குமதிக்கு ஏற்றவாறு ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாய நிலை, பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இறக்குமதி வரியை அகற்றிட வேண்டும். முழுவதும் முழுமையடையாத முந்திரி பருப்பு இறக்குமதியை நிரந்தரமாக தடை செய்திட வேண்டும்.

தொழில்துறை கழிவான முந்திரி உமி கலந்து முந்திரி பருப்பு இறக்குமதி செய்யபடுவதை தடை செய்ய வேண்டும். ஆசியா வர்த்தக ஒப்பந்தத்தின் படி வறுத்த முந்திரி ஹெச்எஸ் 20081910 முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.இதனை பயன்படுத்தி மற்ற முந்திரி பருப்புகள் இறக்குமதி வரி இல்லாமல் கொண்டு வரப்படுகின்றன, இதனை முறைபடுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X