டிரம்ப் கண்ணை மறைக்க சுவர் குஜராத் காங்., குற்றச்சாட்டு| Dinamalar

டிரம்ப் கண்ணை மறைக்க சுவர் குஜராத் காங்., குற்றச்சாட்டு

Added : பிப் 15, 2020
Share

ஆமதாபாத்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையில் இருந்து, குடிசைப் பகுதிகளை மறைக்க, சுவர் எழுப்பப்பட்டு வருவதாக, குஜராத் மாநில காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆமதாபாதில் கட்டப்பட்டுள்ள, கிரிக்கெட் மைதானத்தை, இந்தியாவுக்கு, 24ம் தேதி வரும், அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியுடன் இணைந்து திறந்து வைக்க உள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து, டிரம்பும், மோடியும் பிரமாண்ட பேரணியில், சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லவுள்ளனர்.ஆமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே உள்ள சர்தார் நகரில், குடிசைப் பகுதி ஒன்று உள்ளது. அதற்கு அருகில், 500 மீட்டர் நீளமும், நான்கு அடி உயரமும் கொண்ட சுவர் ஒன்று, தற்போது கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர் மனிஷ் தோஷி கூறியதாவது:குஜராத் வரும் டிரம்பிடம் இருந்து, குடிசைப் பகுதியை மறைக்க, சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. வறுமையை ஒழிப்பதற்குப் பதில், ஆளும் கட்சி, சுவர் எழுப்பி, ஏழை மக்களை மறைக்கிறது. இது, 25 ஆண்டுகளாக, பா.ஜ., ஆட்சி புரியும் குஜராத்தில், வறுமை பன்மடங்கு அதிகரித்துள்ளதை தெளிவாக காட்டுகிறது.

2014ல், சீன அதிபர் ஸி ஜின்பிங் வந்தபோதும், இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது.இவ்வாறு, அவர் கூறினார்.காங்., குற்றச்சாட்டை, ஆமதாபாத் மாநகராட்சி மறுத்துள்ளது. துணை மாநகராட்சி ஆணையர் கே.பி.தாக்கர் கூறியதாவது:தற்போது கட்டப்பட்டுவரும், 500 மீட்டர் நீளம் கொண்ட சுவருக்கும், அதிபர் டிரம்ப் வருகைக்கும், எந்த சம்மந்தமும் இல்லை. அந்தப் பகுதியில் உள்ள சாலை மார்க்கத்தை, அதிபர் டிரம்ப் பயன்படுத்தாவாரா என்பதே எங்களுக்குத் தெரியாது. அங்கு, பல வருடங்களாக சுவர் இருந்தது. அந்த சுவர் பாழடைந்துவிட்டதால், புதிய சுவரைக் கட்ட, நாங்கள் முடிவு செய்தோம். டிரம்ப் பயணம் முடிவு செய்வதற்கு முன்பே, அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X