100 ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு உத்தரவு

Added : பிப் 15, 2020
Advertisement

கொச்சி: உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத, கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ௧௦௦ மரக்கன்றுகள் நட வேண்டும் என, நீதிபதிஉத்தரவிட்டார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.இம்மாநிலத்தில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனம் ஒன்று, தொழில் வரி விலக்கு கோரி, தொழில் மற்றும் வர்த்தக துறையினரிடம் மனு அளித்தது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அந்நிறுவனம், ௨௦௦௭ல், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்தின் தரப்பில், 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், இரண்டு மாதத்திற்குள் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது.இதையடுத்து, கெமிக்கல்நிறுவனம், 5 லட்ச ரூபாய் செலுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பின், தனியார் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ௨௦௦௮ல், உயர் நீதிமன்றம், அதிகாரிகளுக்கு மீண்டும் அவகாசம் வழங்கியது.ஆனால், கெமிக்கல் நிறுவனத்தின் கோரிக்கை மீது, எட்டு ஆண்டுகள் கடந்த பின்னும், அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை; ஒரு வழியாக, ௨௦௧௬ல் விசாரணை நடத்தியும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த காலதாமதம் மற்றும் நடவடிக்கை எடுக்காதது குறித்து, உயர் நீதி மன்றத்தில் தனியார் நிறுவனம் மீண்டும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அமித் ராவல், தொழில் மற்றும் வர்த்தக துறையினரின் கால தாமதத்திற்கு கண்டனம் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய, தொழில் துறை இயக்குனரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.பிஜு, அபராதமாக, ௧௦௦ மரக்கன்றுகள் நட வேண்டும் என, உத்தரவிட்டார். கெமிக்கல் நிறுவன மனுவை விசாரிப்பதில், காலதாமதம் செய்த அதிகாரிகள் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மரக்கன்றுகள் நடும் இடத்தை தேர்வு செய்து, வனத்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X