விபத்தில் உயிரிழந்தவர் உடல் உறுப்புகள் தானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்தவர் உடல் உறுப்புகள் தானம்

Added : பிப் 15, 2020
Share

நீலாங்கரை : கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சென்ற கார் மோதி, ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு, திருவான்மியூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அக்கரை நோக்கி, கார் ஒன்று அதிவேகமாக சென்றது. திருவான்மியூர் பகுதியில் அந்த கார், இருவரை இடித்து நிற்காமல் சென்றது. பாதிக்கப்பட்டவர்கள்காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதனிடையே, ஈஞ்சம்பாக்கம் அருகே சாலையோரம், இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சம்பத்குமார், 52. என்பவர் மீது கார் மோதியது. அக்கரை பகுதியில் போலீசார் காரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் காரை ஓட்டிய நபர், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சேர்ந்தவர், விஷால், 29, என்பது தெரிய வந்தது.மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, சுயதொழில் செய்து வந்துள்ளார். குடிபோதையில் காரை இயக்கியதும் தெரிய வந்தது.அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விஷாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த சம்பத்குமார், திருவாரூர் மாவட்டம், திருக்குவளை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, உறவினர்கள் ஒப்புதலுடன் சம்பத்குமாரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X