பொது செய்தி

தமிழ்நாடு

மேல்புவனகிரி ஒன்றிய குழு கூட்டம்

Added : பிப் 15, 2020
Advertisement
 மேல்புவனகிரி ஒன்றிய குழு கூட்டம்

புவனகிரி:கடலுார் உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களை, சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, மேல்புவனகிரி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேல்புவனகிரி ஒன்றியகுழு முதல் கூட்டம் நடந்தது. சேர்மன் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., வி.சி., கட்சிகளை சேர்ந்த அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்ததற்கும், கடலுார் உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களை சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், பழுதடைந்துள்ள புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X