பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

Added : பிப் 15, 2020
Advertisement
 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

சிதம்பரம்:சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், டி.எஸ்,.பி., கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், குமார், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஹேமலதா வரவேற்றார்.பாண்டியன் எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

நந்தனார் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி, சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வல்லதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, தாண்டவராயன் சோழன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, என 5 பள்ளிகளை சேர்ந்த 929 மாணவ மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர்கள் விஜயவானன், ரவி, சண்முகம், சுந்தர், தில்லை கோபி, சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நந்தனார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X