'இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவசர சட்டம் ஒன்றே தீர்வு'

Added : பிப் 15, 2020
Advertisement

புதுடில்லி: ''எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, மாநில அரசு பணிகளில், இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை சரி செய்ய, மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

'மாநில அரசு பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில், எஸ்.சி., - எஸ்.டி., எனப்படும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்குவது, மாநில அரசின் தனிப்பட்ட விருப்பம்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இது குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது.

அந்த மனு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும் போது, தீர்ப்பு மாற்றப்படுமா என்பது தெரியாது.எனவே, இந்த விவகாரத்தை சுலபமாக சமாளிக்க வேண்டுமென்றால், மத்திய அரசு, அவசர சட்டத்தை கொண்டு வந்து, அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், உடனடியாக இந்த விவகாரத்தில், தீர்வு கிடைக்கும். மேலும் இது போன்ற விவகாரங்களில், நீதிமன்ற தலையீட்டை தவிர்க்க, இவற்றை அரசியல்சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X