பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வாக்காளர் எண்ணிக்கை

Added : பிப் 15, 2020
Advertisement

சென்னை : சென்னை மாவட்டத்தின், 16 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், நேற்று வெளியிட்டார்.

சென்னை மாவட்டத்தின், 16 சட்டசபை தொகுதிகளுக்கான, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2020க்கான இறுதி வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன், ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார்.

கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக, வரைவு வாக்களர் பட்டியல், 2019 டிசம்பரில் வெளியிடப்பட்டுள்ளன. 2020 ஜன., 1ம் தேதி, தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, உரிய படிவங்கள் பெறப்பட்டன.நேரடி கள ஆய்வு வாயிலாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரால், படிவங்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில், இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில் பார்வையிடலாம். மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கள ஆய்வில் கண்டறிந்த, இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர் மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் என, பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய கோரி, 3,384 படிவங்கள் வந்தன. அதில், உரிய விசாரணைக்கு பின், 1,786 பெயர்கள், பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

2019ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 38 லட்சத்து, 88 ஆயிரத்து, 673 பேர் இடம் பெற்றனர். தற்போது, இறுதி வாக்காளர் பட்டியலில், 39 லட்சத்து, 46 ஆயிரத்து, 792 பேர் இடம் பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை விட, 58 ஆயிரத்து, 119 பேர், 1.49 சதவீதம் கூடுதலாக உள்ளனர்.

அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில், 3 லட்சத்து, 6 ஆயிரத்து, 347 பேரும், துறைமுகம் தொகுதியில், 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 337 பேரும் உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின், 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் எண்ணிக்கை, 19 ஆயிரத்து, 686 ஆகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X