பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியவர் சிக்கினார்

Added : பிப் 15, 2020
Advertisement

புதுடில்லி; ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதி வர்த்தக அமைப்பின் தலைவர் தன்வீர் அஹமது வானி, பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக கூறி, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார்.

ஜம்மு - காஷ்மீரிலிருந்து, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் சையத் நவீத் முஷ்டாக் அகமது, ரபி அகமது ஆகியோரை, பாதுகாப்பாக, தன் வாகனத்தில் அழைத்து சென்றதாக, டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது; பின், அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதையடுத்து, பயங்கரவாதிகள், தேவிந்தர்சிங், அவரது கார் டிரைவர் சாபி மிர் ஆகியோரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

பயங்கரவாதிகள், சண்டிகரில் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்த, நவீதின் சகோதரர் சையது இர்பான் அஹமதுவும் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதி வர்த்தக அமைப்பின் தலைவர் தன்வீர் அஹமது வானி, டில்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.அவரிடம், பயங்கரவாதி சையத் நவீத் முஷ்டாக் அகமது உள்ளிட்டவர்களுக்கு, நிதி உதவி செய்தது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பின், தன்வீர் அஹமதுவை கைது செய்த அதிகாரிகள், ஜம்முவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, ஆறாக உயர்ந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X