சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்ட மாணவர்கள் அடிதடி தரமணியில் மக்கள் ஓட்டம்

Added : பிப் 15, 2020
Advertisement

தரமணி : பெருங்குடியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை உள்ளது. இதில், இளங்கலை, முதுநிலை பட்ட படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம், கல்லுாரி வளாகத்தில் உள்ள உணவகத்தில், பிகாம்., பி.எல்., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.அப்போது, இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் வந்தனர். அவர்கள், அமர இருக்கை இல்லை. இரண்டாம் ஆண்டு மாணவரிடம், இருக்கை கேட்டுள்ளனர்.இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, இரண்டாம் ஆண்டு மாணவர், சக மாணவர்களுடன், தரமணி ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.அங்கு வந்த இறுதி ஆண்டு மாணவர்களுக்கும், அவர்களுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும், தங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.சற்று நேரத்தில், 50க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று கூடி, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ரயில்வே போலீசார், பயணியர் மற்றும் மாணவர்களை சமாதானப்படுத்தினர்.

இச்சம்பவத்தால், தரமணி ரயில் நிலையம்,போர்க்களம் போல காட்சியளித்தது. மக்கள் அலறியடித்து ஓடினர்.போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரு தரப்பு மாணவர்கள் கொடுத்த புகாரின் படி, தரமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X