எம்.ஜி.எம்., மருத்துவமனை நரம்பியல் துறையில் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.எம்., மருத்துவமனை நரம்பியல் துறையில் சாதனை

Added : பிப் 15, 2020
Share
சென்னை : சென்னை, எம்.ஜி.எம்., மருத்துவமனையில், மூளையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தவருக்கு, ஆழ்துளை துாண்டல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்தவருக்கு, மூளையில் கோளாறு ஏற்பட்டதால், அதிக வலியுடன், பெரிதும் பாதிக்கப்பட்டார். சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த

சென்னை : சென்னை, எம்.ஜி.எம்., மருத்துவமனையில், மூளையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தவருக்கு, ஆழ்துளை துாண்டல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவருக்கு, மூளையில் கோளாறு ஏற்பட்டதால், அதிக வலியுடன், பெரிதும் பாதிக்கப்பட்டார். சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவமனையின் மூத்த நரம்பியல் துறை இயக்குனர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்டவருக்கு, ஆழ்துளை துாண்டல் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இது குறித்து, நரம்பியல்துறை நிபுணர் ஸ்ரீதர் கூறியதாவது:ஆழ்துளை அறுவை சிகிச்சை முறையில், மூளை உயிரணுக்கள் மற்றும் அவற்றின் இணைப்புகளை துாண்டி விட, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில், 'மைக்ரோ - எலெக்ட்ரோட்கள்' பொருத்தப்படும். நடுக்குவாத நோய், தசை விறைப்பு நோய் உள்ளிட்டவைகளுக்கு தான், இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுபோன்ற சிகிச்சை, இந்தியாவில், இதுவரை, 10க்கு குறைவாகவே நடந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையில், எம்.ஜி.எம்., மருத்துவமனையும் சாதனை படைத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X