சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலைய பள்ளம் சீரமைப்பு

Added : பிப் 15, 2020
Advertisement
 பஸ் நிலைய பள்ளம் சீரமைப்பு

சிதம்பரம்:தினமலர் செய்தி எதிரொலி காரணமாக, சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்த மெகா சைஸ் பள்ளத்தை நகராட்சி நிர்வாகம் சீரமைத்துள்ளது.

சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில், ஆபத்தான வகையில் பெரிய பள்ளம் இருந்தது. இதனால் விபத்து அபாயம் இருந்து வந்தது.

இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் பஸ் நிலைய சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தை சீர் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X