வீடு தேடி வரும் புதிய வாக்காளர் அட்டை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி வரும் புதிய வாக்காளர் அட்டை

Added : பிப் 15, 2020
Share

'தமிழகத்தில், 16 இலக்க எண் உள்ள வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு, 10 இலக்க எண்களுடன், புதிய வாக்காளர் அட்டையை, அலுவலர்கள், வீட்டிற்கு வந்து வழங்குவர்' என, தலைமை தேர்தல் அதிகாரி சாஹு தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு:வாக்காளர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட, புகைப்பட அடையாள அட்டை, 16 இலக்க எண்களை கொண்டதாக இருந்தால், 10 இலக்க எண்கள் உள்ள, புதிய வண்ண புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, புதிய வாக்காளர் அடையாள அட்டையில், பழைய எண், புதிய எண் இரண்டும் இடம் பெற்றிருக்கும். பழைய எண், அட்டையின் பின்புறம் அச்சிடப்பட்டிருக்கும்.புதிய வாக்காளர் அட்டைகளை, ஓட்டுச்சாவடி அலுவலர், வீட்டிற்கே வந்து வழங்குவார். உரிய படிவத்தில், வாக்காளரிடம் ஒப்புகை பெற்றுக் கொள்வார்.

இவ்விபரம், தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் உள்ள, தேர்தல் பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது '1950' என்ற, இலவச எண்ணை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X