நாட்டின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் சொல்லாததையும் செய்வோம்: நிர்மலா

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (29)
Advertisement
NirmalaSitharaman,Nirmala,FinanceMinister,BJP,Budget2020,நிர்மலா,பட்ஜெட்,பாஜ,

புதுடில்லி: ''நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, பட்ஜெட்டில் அறிவிக்காததையும், மத்திய அரசு செய்யும்,'' என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வரும் நிதியாண்டான, 2020 - 21க்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., 1ம் தேதி தாக்கல் செய்தார். இதையடுத்து, பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நேற்று(பிப்.,14) நடந்தது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை, வரித்துறை வல்லுனர்கள், தொழிலதிபர்கள் பலர் பங்கேற்றனர்.





கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, அரசு எதைச் செய்யவும் தயாராக உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத நடவடிக்கைளையும் எடுப்போம். மக்கள் கையில் பணம் புழங்குவதற்கான ஆலோசனைகளை அரசு ஏற்கும். வருமான வரி தாக்கல் தொடர்பாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'பான்' அட்டை வழங்குவது, மேலும் எளிமையாக்கப்படும். இவ்வாறு, நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-பிப்-202008:15:44 IST Report Abuse
P R Srinivasan மொதல்ல சொன்னதை செய்யுங்கள். சிறு தொழில் செய்பவர்களின் ஜிஎஸ்டி பிரச்னையை முதலில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
16-பிப்-202008:04:50 IST Report Abuse
Nallavan Nallavan ..... ஆங் ..... கட்டுமரம் சொன்ன டயலாக் ஆச்சே ..... ..... கட்டுமரம் தமிழினத்துக்கு -ன்னு சொல்லிச்சு .....
Rate this:
Share this comment
Cancel
Scorpio - New York,யூ.எஸ்.ஏ
15-பிப்-202014:30:57 IST Report Abuse
Scorpio சரக்கு இல்லை - இப்படி ஏதாவது சொல்லி காலம் ஓட்ட வேண்டிய கட்டாயம் -
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X