அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாரி சுருட்டிய பட்ஜெட்: கமல்

Added : பிப் 15, 2020
Advertisement

சென்னை: 'தமிழக பட்ஜெட், மக்களின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல உள்ளது' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:திருக்குறளுடன் தங்களது பட்ஜெட்டை தாக்கல் செய்த, ஆளும் கட்சியின் வினை, ஒட்டு மொத்தமாக தமிழகத்தில், மக்களின் வளங்களை வாரிச் சுருட்டி செல்வது போல உள்ளது. 20 ஆண்டுகளில் ஆண்ட, ஆளுகின்ற, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள், பொறுப்பற்ற முறையில் கடைபிடித்த, நிதி நிர்வாகத்தின் காரணமாக, ஒவ்வொரு தமிழரின் தலையிலும், 57 ஆயிரத்து, 500 ரூபாய் கடன் சுமை உள்ளது. தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றியதே, இந்த இரு அரசுகளின் சாதனை. எனவே தான், மக்கள் நீதி மையம், இந்த இரண்டு கட்சிகளும் அகற்றப்பட வேண்டும் என, தொடர்ந்து கூறி வருகிறது.

ஆட்சி காலத்தின் கடைசியில் இருக்கும் காரணத்தால், நிதி ஆதாரத்தை பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல், பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இனி, இவர்களிடம் குறை தேடி பயனில்லை; மக்கள் மாற்றத்தை தேடுவதே தீர்வாகும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X