சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி: 2 பேர் காயம்

Added : பிப் 15, 2020
Share
Advertisement

பெண்ணாடம்:சுவர் இடிந்து விழுந்ததில், மூதாட்டி இறந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 65. விவசாயி. இவரது மனைவி அழகம்மாள், 60; உறவினர் சுதா, 35; மூவரும் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் சுவர் ஓரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, எதிர்பாராத விதமாக, திடீரென வராண்டாவின் சுவர் இடிந்து விழுந்ததில், மூவரும் சிக்கிக்கொண்டனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, மூவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அழகம்மாள் இறந்தார். சுதா பெரம்பலுார் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும், பெரியசாமி திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், நேற்று, சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டார். திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X