பொது செய்தி

தமிழ்நாடு

தடயம் பப்ளிகேஷன்ஸ்: 10 நாள் புத்தக கண்காட்சி

Added : பிப் 15, 2020
Advertisement
 தடயம் பப்ளிகேஷன்ஸ்: 10 நாள் புத்தக கண்காட்சி

விருத்தாசலம்:தடயம் பப்ளிகேஷன்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், விருத்தாசலம் ராஜராஜேஸ்வரி ஹாலில், 10 நாட்கள் புத்தக கண்காட்சி துவங்கியது.

பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கி, கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். தாசில்தார் கவியரசு, நகராட்சி கமிஷனர் (பொ) பாண்டு, இணை சார் பதிவாளர் கணேசன், செயல் அலுவலர் முத்துராஜா, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.தடயம் பப்ளிகேஷன்ஸ் பாபு வரவேற்றார். முதல் விற்பனையை ரோட்டரி சங்க தலைவர் தீபக் சந்த் துவக்கி வைக்க,
முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் பெற்றுக் கொண்டார்.

அரசு வழக்கறிஞர் விஜயகுமார், மூத்த வழக்கறிஞர் செல்வபாரதி, பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலர் சுரேஷ், டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தேர்தல் துணை தாசில்தார் அன்புராஜ், வழக்கறிஞர்கள் அருள்குமார், ரவிச்சந்திரன், அம்பேத்கர், சந்திரசேகரன், மணிகண்ட ராஜன், கோவில் எழுத்தர் கோவிந்தராஜ், த.மா.கா., அசோக்குமார், மணிகண்டன், பா.ஜ., பாபு, இனாயத் சைக்கிள்ஸ் இனாயதுல்லா, மோகன்குமார், ஓவியர்கள் மோகன், முருகன், சுரேஷ், முரளி பங்கேற்றனர்.வரும் 23ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X