தற்கொலை, பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை, பலி

Added : பிப் 15, 2020
Share

பஸ்சில் அடிபட்டு மாணவன் பலி

தாம்பரம்: ஆதம்பாக்கம், திருவள்ளுவர் தெருவில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், பொன்மணிச்செல்வன், 50; தனியார் 'டிவி' உதவி ஆசிரியர். இவரது, மகன் அபிஷேக், 21. இவர், தனியார் டூடோரியல் கல்லுாரியில், படித்து வந்தார். நேற்று மாலை, பெருங்களத்துாரில் உள்ள தன் நண்பரை பார்க்க, 'பஜாஜ், கே.டி.எம்.டியுக்' பைக்கில் சென்றார். தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே வந்தபோது, டூ - வீலர் மீது, தனியார் பஸ் மோதியது. இதில், படுகாயமடைந்தவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பஸ் ஓட்டுனரான, பூந்தமல்லியைச் சேர்ந்த, சரவணன், 31, என்பவரை கைது செய்தனர்.

விபத்தில் முதியவர் உயிரிழப்பு

கொடுங்கையூர்: கொளத்துார், திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர், சடகோபால், 52; லிப்ட் ஆப்பரேட்டர். இவர், நேற்று தன் இருசக்கர வாகனத்தில், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, ஜி.என்.டி.சாலை வழியாக சென்றார். அப்போது, முன்புறம் சென்ற மாநகர பேருந்தை முந்த முயன்றபோது, தடுமாறி கீழே விழுந்தார். இதில், பின்புறம் வந்த கனரக வாகனம், அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி மோதி வாலிபர் மரணம்

கோயம்பேடு: சென்னீர்குப்பம், குமரன் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர், பாலமுருகன், 19; கூலி தொழிலாளி. 12ம் தேதி, இருசக்கர வாகனத்தில், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்றார். வானகரம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி, அவரது வாகனம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பாலமுருகன், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கோயம்பேடு போலீசார், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகத்குமார், 30, என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை

வியாசர்பாடி: வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் செந்தில், 30; ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு லீலாவதி, 28, என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். எட்டு மாதங்களுக்கு முன், லீலாவதி, செந்திலை பிரிந்து, தாய் வீட்டில் சென்று விட்டார். குடும்பம் நடத்த வரக்கோரி, செந்தில், பலமுறை லீலாவதியிடம் சமரசம் பேசியும் அவர் வரவில்லை. மனஉளைச்சலடைந்த செந்தில், நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X