சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்து: எஸ்.ஐ., பலி

Added : பிப் 15, 2020
Advertisement
 சாலை விபத்து: எஸ்.ஐ., பலி

கடலுார்:வேகத்தடையில் மோதி தலையில் காயமடைந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 48; பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 10ம் தேதி இரவு 11:00 மணிக்கு, பணியை முடித்து விட்டு பண்ருட்டி-கடலுார் சாலை வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்றார். கடலுார் அரசு ஐ.டி.ஐ., அருகில் வந்த போது, வேகத்தடை இருப்பது தெரியாமல் சென்று, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயம் அடைந்து, புதுச்சேரி, கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X