சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கயவர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 கயவர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

கே.கே.நகர் : உறவினர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி, உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கே.கே.நகரைச் சேர்ந்த தம்பதிக்கு, 7 - 10 வயதிற்கு உட்பட்ட இரண்டு மகள்களும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். இருவரும், வீட்டிற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, இரண்டாவது மகள் உபாதை கழிப்பதற்காக கழிப்பறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால், அவரது தாய் கழிப்பறையை திறந்து பார்த்தார்.

அப்போது மயங்கி கிடந்த மகளை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். கே.கே.நகர் போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: சிறுமியின் தாய் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், இரண்டு பெண் உள்ளதும் தெரிய வந்தது. மேலும், அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த அவர், இரண்டு மகள்களையும், தாய் வீட்டில் விட்டுவிட்டு, புதுச்சேரியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்ற சென்றுவிட்டார்.

அங்கு உடன் பணிபுரிந்தவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மகள்களை பார்ப்பதற்காக சொந்த ஊரான திண்டிவனத்திற்கு சென்றபோது, அங்கு உறவினர்களால், தன் மகள்கள் சீரழிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, தன் மகள்கள், மகன், கணவருடன் சென்னை கே.கே.நகருக்கு குடியேறினார்.

இந்நிலையில் தான், உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. சிறுமியை சீரழித்த வழக்கில், 25 பேரை, ஏற்கனவே புதுச்சேரி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-202013:22:22 IST Report Abuse
ருத்ரா இப்போதய சில உறவினர்கள் கைவிடப்பட்ட குழந்தைகளை எப்படி பாசத்தோடு பார்ப்பார்கள் மனிதாபி மானமற்றவர்கள். குழந்தைகள் எதிர்காலத்தை கருத்திற் கொண்டாவது மீண்டும மீண்டும் எதாவது காரணம் சொல்லிக் கொண்டு கல்யாணம் ? ஒரே தப்பை பலமுறை செய்து குழந்தை களை பாதுகாப்பின்றி கதற விடுகிறார்கள் வேதனை. குழந்தை பிறப்பை யாவது தவிர்க்கலாமே. மழலையின் அன்பை புரியாதவர்கள் மண்ணில் பிறப்பதே கொடூரம்
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-202007:07:11 IST Report Abuse
ஆப்பு பெத்துப் போடறதோட கடமை முடிந்து விட்டதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X